கிராம சேவை உத்தியோகத்தர்களின் மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சை செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.
நாடு பூராகவும் 858 மத்திய நிலையங்களில் இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதுடன், அதற்காக ஒரு இலட்சத்து 9021 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் பரீட்சைக்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 29ம் திகதிக்கு முன்பாக பரீட்சைககான அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரிகள் 1911 அல்லது 0112 785230, 0112 177 075 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு இது தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.