கிராமத்து தலைவரானார் விஜய்

தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர் நடிக்கும் இன்னொரு வேடமும் வெளியாகியுள்ளது. அதாவது கிராமத்து ஊர் தலைவராக விஜய் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய படப்பிடிப்பில் மதுரையில் 80-களில் நடப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதில், விஜய் மானுரை என்ற கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவராக நடித்தாராம். கதைப்படி ஊர் மக்களிடம் பெரும் செல்வாக்கு வைத்திருக்கும் விஜய், அவர்களுக்கு இலவசமாக பள்ளி, மருத்துவமனைகள் கட்டிக்கொடுப்பபது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts