திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) கின்னஸ் சாதனை முயற்சியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் கட்டுரை எழுதி சாதனை படைக்கும் முயற்சியினையே அவர் மேற்கொண்டுள்ளார்.
உலகில் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்ட்டிருக்கும் போதும் இலக்கித்துறை சார்ந்த கின்னஸ் சாதனைகள் பெருமளவில் நிகழ்த்தப்டவில்லை.
கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பில் எழுதவுள்ள அவர் முதல் 04 மணித்தியாலம் எழுத்தும் எனது வாழ்வும் எனும் பகுதியாகவும் அடுத்து வரும் 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் எனும் பகுதியாகவும் இறுதி 04 மணித்தியாலங்களை கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதவுள்ளார்.