கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ் இளைஞர் ஆசியக் கிண்ணப் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

34 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 19 வயதுக்கு கீழ் இளைஞர் ஆசியக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

Related Posts