Ad Widget

காவிரி விவகாரம் : போராட்டங்கள் தேவையற்றது-நாசர்

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் தேவையற்றது என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு வன்முறை உருவாகியிருக்கிறது. மேலும் இருமாநிலத்தின் திரையுலக பிரபலங்களும் போராட்ட களத்தில் இறங்க தயாராகிவிட்டனர்.

nasar

இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டம் நேற்று நடந்தது, அதில் தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவிற்கும் நடிகர் சங்கம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு…‛‛காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கிறது. நாம் எல்லோரும் இந்நாட்டின் புதல்வர்கள். இந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்று கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டது என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது. அங்கு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொண்ட சில கன்னட அமைப்புகளுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இருமாநிலத்திலும் இரண்டு மாநிலத்தை சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள். ஒரு சிலரின் வெறிச்செயலால் சாமானியனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது கவலையளிக்கிறது. நாம் அனைவரும் பொறுப்புணர்வோடு ஒன்று சேர்ந்து வன்முறையை தடுக்க வேண்டும், அனைவரும் பாதுகாப்புடன் வாழ வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், சட்டத்தின் மூலமும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய நாசர்… ‛‛காவிரி விவகாரத்தை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. கோர்ட் உத்தரவு பிறப்பித்த உள்ள நிலையில் அதை அவமதிக்கும் விதமாக போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது. இப்போதைய சூழலில் போராட்டங்கள் தேவையற்றது என்று கூறியுள்ளார்.

Related Posts