காவிரிப் பிரச்சனை, தமிழகத்துக்குச் சொந்தமான 60பேருந்துகள் தீக்கிரை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

காவிரிப் பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

bangalore

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து அங்கே வன்முறைகள் உருவாகியதையடுத்து, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடாத்தினர்.

இதில் ஹெக்கனஹள்ளி பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய உமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

நிலைமை பதற்றமாக இருப்பதாகவும், ஆனால் கட்டுக்குள் இருப்பதாகவும் காவல் துறை தலைவர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாட்டு இலக்கத் தகட்டுடன் வரும் வாகனங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

பெங்களூர் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பேருந்துகள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 40 பாரஊர்திகளும் கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts