காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? கமல்ஹாசன் கேள்வி

சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே சென்னையில் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ்
காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இது திட்டமிட்ட வன்முறை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “நன்றி கனம். நீதிபதிகளே. நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?” கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts