காளை மாடு முட்டியதில் வயோதிபர் படுகாயம்

accidentமாடு முட்டியதில் வயோதிபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். தாவடி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் செல்வராசா ஜெயராசா (வயது 59) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர், தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த காளை மாட்டினை அவிழ்ப்பதற்காக சென்றபோது, காளை மாடு முட்டியதில் அவரது கழுத்து பகுதியில் காயம் ஏற்ப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts