காளி கோவிலில் ஷூ அணிந்ததாக ஷாருக்கான், சல்மான்கான் மீது வழக்கு

பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான். இவர்கள் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று ‘பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது.

de90734e-707c-46e0-a0f5-491b9dd18878_S_secvpf.gif

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு ஆனது.

காளிகோவிலில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றதற்காக இருவர் மீதும் இந்து மகாசபை மீரட் பிரிவு தலைவர் பரத் ராஜ்புத் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை மீரட் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

Related Posts