`காலா’ படத்தில் ரஜினிக்கு இணையான வில்லன் நடிகர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் `காலா’ படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, மீண்டும் ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார்.

இவர்களுடன், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, நானா படேகர் `காலா’ ரஜினிக்கு எதிராக முக்கிய வில்லனாக, அமைச்சர் கதாபாத்திரத்தில் மிரட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி என்றாலே மாஸ் என்றிருக்கும் போது, அவருக்கு இணையான வெயிட்டான வில்லன் நடிகர் கிடைத்தால் எப்படியிருக்கும்?. எனினும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

Related Posts