காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்து 1,849,500 ரூபாய் வசூல்

fineயாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த 392 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 1,849,500 ரூபா பாவணையாளர் அதிகார சபையினால் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் உள்ள 5 நீதிமன்ற எல்லைக்குற்பட்ட பிரதேசங்களில் காலவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 392 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுக்கு எதிராக யாழ். மாவட்டத்தில் உள்ள 5 நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

Related Posts