நேற்றய தினம் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையற்ற வர்த்தக நடவடிக்கை தொடர்பில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய வழக்காக காலாவதியான பொருட்கள் விற்பனை தொடர்பில் 11 கடை உரிமையாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தண்டப்பணமும் அறவிடப்பட்டது.
இவ்வாறு காலாவதியான பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் ( பேஸ்வோஸ், கிறீம்) அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றது.
எனவே அழகுசாதனப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் காலாவதியாகும் திகதி,குறியீட்டு இலக்கம் என்பவற்றை கவனித்து பொருட்களை கொள்வனவு செய்யுமாறு யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் இணைப்பதிகாரி வசந்த சேகரன் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.