மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்து மற்றும் செயல்முறைப் பரீட்சைகள் யாவும் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.