நாட்டில் வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களில் நாளை முதல் பலத்த காற்றுவீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வட.மாகாணத்தில் மணிக்கு சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசுமெனவும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பொதுமக்கள் மின்னலினால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.