காலத்தை வீணடிக்காது வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்: இரா.சம்பந்தன்

காலத்தை வீணடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அரசியலமைப்பின் இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணியை விரைந்து முடிப்பதற்கு இடையூறாக உள்ள சகல தடைகளையும் நீக்குவதற்கு நாம் என்றுமே உதவத் தயாராக இருக்கின்றோம்.

இன்றைய நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். இதனால் மேலும் காலம் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts