‘காற்று வெளியிடை’: அடுத்த ஆண்டு காதலர் தின வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘காற்று வெளியிடை’ படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

தற்போது காஷ்மீரின் லடாக் பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ரொமேண்டிக் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி-அதித்தி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ‘தில் சே’ படத்துக்கு பிறகு இந்தப் படத்தை காஷ்மீரில் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.சர்.பாலாஜி, தில்லி கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கும் இப்படத்தின் திரையீட்டு உரிமத்தை பிரபல தயாரிப்பளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார்.

Related Posts