அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கையர்கள், யன்னல்கள் அற்ற இரும்பு அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.த கார்டியன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
அவுஸ்திலேய மேல் நீதிமன்றத்தின் ஆவணம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கப்பல் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு அறைகளில், காற்றுப் புகுவதற்கேனும் வசதிகள் இல்லை என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அகதிகளாக சென்றுள்ள ஆண்கள், அவர்களின் குடும்பங்களில் இருந்து வேறுபடுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த 153 அகதிகளில் 86 பேருக்கு சட்டத்தரணிகள் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர்களை அணுக வசதி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இவ்வாறு வசதிகள் இன்று அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அந்த நாட்டின் அகதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.