காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27, 28 ஆகிய திகதிகளில் புயலாக வலுப்பெறும். தமிழக கரையை நோக்கி புயல் நகர கூடும். 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30ம் திகதியும் மே 1ம் திகதியும் தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் அவ்விரு நாட்களும் தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.

டென்மார்க் ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வலுவான தாழ்வுப் பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது 26ம் திகதி இரவு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, 27, 28ம் திகதிகளில் புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிiலை நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான தாழ்வுப் பகுதி வடதமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தால் வரும் 30 மற்றும் மே 1ம் திகதி தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

28 மற்றும் 29ம் திகதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒருசில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 மற்றும் மே 1ம் திகதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிகக் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்ததுள்ளது.

அதே போல, 26ம் தேதி முதல் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் அதிகமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts