காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை, கனமழை தொடரும் -இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை என்றும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இந்த புயல் சின்னம் காரைக்கால்-சென்னை இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை என்றும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாகமாற வாய்ப்பு இல்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிஉள்ளது. தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றுடன் கனமழை பெய்யும். புதுச்சேரிக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 12 மணி முதல் 2:30 மணிக்குள் கரையை கடக்கும். கனமழை தொடர்ந்து பெய்யும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Related Posts