காற்றழுத்தத் தாழ்வு நிலை : தெற்கு இலங்கை பகுதியில் நீடிப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு இலங்கை பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற இடங்களிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக் காலமாகும்.

தென்மேற்கு பருவமழைக் காலம் முடியும் நேரத்தில் நடா புயல் உருவானது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை தாமதமாக முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழகத்துக்கு அதிக மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் தாழ்த்தி அக்டோபர் 30 -ஆம் தேதிதான் தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மழை பெய்யம் என்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழை வீழ்சிசி குறைவாகவே காணப்பட்டது.

வர்தா புயல் புயலானது கரையைக் கடந்த போது, தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதத்தையும், காற்றின் அழுத்தத்தையும் அடித்துக் கொண்டு சென்றது. இதனால் வர்தா புயலுக்குப் பின்பு, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் வலுப்பெறாமல் மறைந்துவிட்டன.

பருவமழை நிறைவு: இதனால் தமிழகத்துக்கு போதிய மழை இல்லாத நிலையே தொடர்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31 -ஆம் தேதி நிறைவடைந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக ஓரிரு வாரங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்குப் பின்பு, ஒரு வாரம் வரை வடகிழக்கு பருவமழை நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பருவமழை நீடிக்கும் பட்சத்தில் மழை வீழ்ச்சி 50 சதவீத வாய்ப்பு உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி மாதம் வங்கக்கடலில் புயல் உருவாகி அதிக மழை வீழ்ச்சியை அளித்துள்ளது. சில சமயங்களில் மழைப்பொழிவு இல்லாமல் வறட்சியுடனும் பருவமழை நிறைவடையும். இவை இரண்டுக்கும் 50 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு நிலை, கடலில் அழுத்தம் ஆகியவற்றைக் கொண்டே இவற்றைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று சென்னை வானிலை நிலைய அதிகாரி தெரிவித்துள்ளதார்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையின் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இவ்வாறு சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது.

Related Posts