கார்த்தி – சுராஜ் படத்துக்காக திருப்பதியில் மொட்டை போட்ட விவேக்

கார்த்தி – சுராஜ் இணையும் புதிய படத்துக்காக திருப்பதி போய் மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார் நடிகர் விவேக்.

vivek

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

வழக்கமாக ஹீரோ போலீஸ் அதிகாரி என்றால், காமெடியனை கான்ஸ்டபிளாக்கி காமெடி செய்ய வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ அஜீத்த்துக்கு இணையான போலீஸ் அதிகாரி வேடத்தில் விவேக்கை கண்ணியமாக காமெடி செய்ய வைத்திருந்தார் இயக்குநர் கவுதம் மேனன்.

இது ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அடுத்து சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் விவேக் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தன் உதவியாளரும் நடிகருமான செல் முருகனுடன் திடீரென திருப்பதி சென்று மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார்.

என்னை அறிந்தால் வெற்றிக்காகவும், அடுத்து நடிக்கும் கார்த்தி – சுராஜ் படத்துக்காகவும் இந்த மொட்டை என்று தெரிவித்துள்ளார் அஜீத்.

சுராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே படிக்காதவன் படத்தில் விவேக் செய்த காமெடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது புதிய கெட்டப்பில் சுராஜ் படத்தில் காமெடி செய்யப் போகின்றனர் விவேக்கும் செல்முருகனும்.

Related Posts