கார்த்திகைத் தீபத் திருநாளைக் கொண்டாட ஒத்துழையுங்கள் இந்து மகா சபை கோரிக்கை

கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்து மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கார்த்திகைத் தீபத் திருநாள் இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இது பண்டைக்காலம் தொடக்கம் இந்து மக்களால் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கார்த்திகைத் தீபத் திருநாள் இந்து சமய ஆரிய கலாசார நிகழ்வாகும்.

இது ஒளி வடிவமான இறைவனை வீடுகளிலும் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வாக இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்கள் அனைவரும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும். இந்துக்களின் இந்த வழிபாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபங்கள் ஏற்றுவது தொடர்பாகப் பலத்த சந்தேகங்கள் மற்றும் நெருக்கடிகள் நிலவுகின்றன. இந்த நிலையில் இந்து மகா சபையின் பிராந்திய சபைகள் வவுனியாவில் ஒன்றுகூடி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts