காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

Karainagar-1

குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்கள் நேற்றய தினம் (14) காரைநகருக்கு விஜயம் மேற்கொண்டு மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

பிரதான வாயிலில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் பாடசாலை சமூகத்தால் வரவேற்கப்பட்டனர்.

Karainagar-2

தொடர்ந்து 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இதனடிப்படையில் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் நுட்பப் பாடநெறிகளை போதிக்கும் பாடசாலைகளில் காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயமும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Karainagar-3

நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்த அதேவேளை புதிய கட்டிடத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட இவ் ஆய்வுகூடத்தில் நான்கு கற்கை நெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related Posts