காரைநகரில் வீடொன்றில் கொள்ளை; 6 சந்தேக நபர்கள் கைது

arrest_1யாழ். காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8 பவுண் தங்கநகைகளும் 45,000 ரூபா பணமும் ஒருதொகை மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேரை ஊர்காவற்றுறை பொலிஸார் சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேலும் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 2 பேரை கொழும்புத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.வி.எல்.விக்கிரமராய்ச்சி தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும் அனலைதீவைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரிடமிருந்தும் மோட்டார் சைக்கிள் 1, ஒன்டரை பவுண் தங்கச்சங்கிலி, 2 சோடி காப்புகள், 41,000 ரூபா பணம், மீள்நிரப்பு அட்டைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts