காயங்களுடன் மருத்துவமனையில் சிம்பு!

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைந்த இந்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

simbu

சிம்புவுக்கு அடிப்பட்ட விஷயம் தெரிந்தவுடன் சிம்புவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். ‘வாலு’ படத்திற்குப் பிறகு சிம்புவின் ரசிகர்கள் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு இப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘தள்ளி போகாதே…’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Related Posts