விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்த படம் நானும் ரெளடிதான். இந்த படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ்.
அவர் நடித்த காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியதால், பின்னர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்குத்துட்டு படத்திலும் காமெடி வேடத்தில் நடித்தார் ஆனந்தராஜ்.
அந்த படத்தில் சந்தானத்தின் அப்பாவாக நடித்தபோதும் காமெடி காட்சிகள் ஸ்கோர் பண்ணியிருந்தார்.
விளைவு, தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் ஆனந்தராஜ்.
இதில் பலசாலி என்ற படத்தில் அதிரடியான காமெடியனாக நடித்துள்ளார் அவர். அவருடன் மன்சூரலிகானும் காமெடிக்கு கைகொடுத்திருக்கிறாராம். இருவருமே ஒரு காலத்தில் மிரட்டல் வில்லன்களாக இருந்தவர்கள். ஆனால் இந்த படத்தில் காமெடியில் மிரட்டியிருக்கிறார்களாம்.
இருவருமே போட்டி போட்டு நடித்திருப்பதால் பலசாலி படத்தில் யார் சிறந்த காமெடியன் என்று பலப்பரீட்சை பார்க்கும் அளவுக்கு ஆனந்த்ராஜ்-மன்சூரலிகானின் காமெடி பர்பாமென்ஸ் அமைந்துள்ளதாம்.