காப்புறுதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்காக கொரோனாவை பயன்படுத்திய குடும்பப் பெண்!!

காப்புறுதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்காக கொரோனாவை பயன்படுத்திய பெண்ணால் நல்லூர்ப் பகுதியில் நேற்றுக் காலை பரபரப்பு நிலவியது.

நுல்லூர்ப் பகுதியில் வசிக்கும் ஒருவர் காப்புறதி நிறுவனம் ஒன்றிலிருந்து காப்புறதியைப் பெற்றுள்ளார் இதற்காக மாதத் தவணை பணம் செலுத்தும் நிலையில் அவரது வீட்டுக்கு நேற்றுக்காலை காப்புறதி நிறுவனத்தினர் பணம் ஆறவீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது தனது கணவருக்கு அதிக இருமலும் காய்ச்சலும் காணப்படுவதால் சிகிச்சைக்குச் சென்றுள்ளார் என்று மனைவி தெரிவித்துள்ளார். இதனால் குறித்த ஊழியர்கள் கொரோனா அச்சத்தால் திரும்பிச் சென்றனர்.

ஆயினும் பின்னர் இந்தத் தகவல் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்கும் சென்றுவிட்டது இவ்வாறு ஒருவர் அதிக காய்ச்சல் இருமலுடன் இருப்பதால் அவரைப் பரிசோதிக்க சுகாதாரக் குழு தேடிச்சென்றபோது காப்புறதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்கே இவ்வாறு பொய் சொன்ன விடயம் தெரியவந்தது அதனையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Related Posts