காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை!!

காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மதவாச்சி பகுதியில் எரு ஏற்ற சென்ற போது பாரவூர்தி விபத்துக்கள்ளாகியுள்ளது.

பாரவூர்தியை திருத்தம் செய்வதற்கு உரிய பணத்தை இவர் காப்புறுதி செய்த நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் குறித்த நிறுவனம் அவருக்கு பணத்தை கொடுக்காது தொடர்ச்சியாக பின்னடித்து வந்துள்ளது.

இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான இவர் கடந்த முதலாம் திகதி தனது தோட்டத்தில் இருந்த நஞ்சு மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இவர் மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட அயலவர் ஒருவர் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து உடனடியாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி 2 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி கே. இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.

Related Posts