கிளாமர் ரோல்களில் பலசுற்றுகள் சொல்லி அடித்த நயன்தாரா இப்போது சவாலான வேடங்களுக்கு திரும்பியிருக்கிறார். ராஜா ராணியில் வலிப்பு வந்தவராக நடித்ததே ஒரு சோதனை முயற்சிதான்.
தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்கு காது கேளாதவர் வேடம் என்கின்றது படயூனிட். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா.
சிம்பதி தோன்றும் விதத்தில் இந்த கதாபாத்திரத்தை உருவாக்காமல் ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் நயன்தாராவின் கேரக்டரை உருவாக்கியிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.
வித்தியாசமான நயன்தாராவைப் பார்க்க ரவுடிக்காக காத்திருங்கள்.