காதல் ஜோடியிடம் கப்பம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்

judgement_court_pinaiகாதல் ஜோடியிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக வழக்குத் தொடர்வதாகவும் அவ்வாறு வழக்குத் தொடராமலிருக்க 4 ஆயிரம் ரூபாவை கப்பமாகத் தருமாறு கோரியே மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் கப்பம் பெற்றுள்ளார்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts