‘காதலில் சிம்புவும் தனுஷும்’?

தற்போது கோலிவுட்டில், புதுமுகங்கள் நடிப்பில் ‘காதலில் சிம்புவும் தனுசும்‘ -என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

இதில் லோகேஷ், ராஜா என்ற இரு புதுமுங்கள் சிம்பு, தனுஷ் பெயரில் நடிக்கின்றனர்.

மேலும், சிம்பு மற்றும் தனுஷின் அதிரடி பஞ்ச் டயலாக்குகளையும் இப்படத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதோடு, படத்தில் சிம்புவின் ‘’கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்’’ என்ற பாடலுக்கும், தனுஷின் ‘’வாட் எ கருவாட்’’ என்ற பாடலுக்கும் இளவட்ட ஹீரோக்கள் ஆட்டம் போட்டு நடித்துள்ளனர்.

இப்படியொரு படம் உருவாகியிருப்பதை கேள்விபட்ட சிம்பு அந்தப் படத்தில் ஒருபாடலை பாட சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் படத்தில் அப்புக்குட்டி, கஞ்சாகருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.

Related Posts