உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பலவிதமான காதலர் தின கொண்டாட்டங்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் மலையால நடிகர் மோகன்லால் சற்று வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவழித்து கொண்டாடியுள்ளார்.
அதுபற்றி அவர் முகநூல் பக்கத்தில், “காதலர் தினம் என்பது அன்பின் அனைத்து பரிமாணங்களையும் கொண்டாடும் தினம்” என்றும், அதனாலேயே அவர் ஆதரவற்ற குழந்தைகள் மீது அன்பு செலுத்தி கொண்டாடியதாக கூறியுள்ளார்.