காதலர் தினத்துக்கு அரசியல்வாதியொருவரால் கொள்வனவு செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு!

இலங்கை அரசியல்வாதியொருவர் காதலர் தினத்தை முன்னிட்டு 53கிலோ ரோஜாமலர்கள் 2000 ஏனைய மலர்களைக் கொள்வனவு செய்ததையடுத்து, இம்மலர்கள் அனைத்தும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இம்மலர்கள் பொதிகளில் அடைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தன.

இவற்றை அரசியல்வாதியொருவரே கொள்வனவு செய்துள்ளார் என விமானநிலைய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

குறித்த மலர்களைக் கொள்வனவு செய்வதற்கு விசாரணை நடாத்தியபின் அவரது தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டபோது அரசியல்வாதியொருவரே தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பொதிகளில் பூச்சியினங்கள் மற்றும் ஏனைய உயிரினங்கள் இருக்கலாம் எனக் கருதி மலர்கள் அனைத்தையும் தாவரவியல் தொற்று நீக்கும் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன், அனைத்து மலர்களையும் விமானநிலையத்தில் வைத்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts