Ad Widget

காத­லியை கழற்­றி­விட காதலன் போட்ட நாடகம்

காத­லித்து வந்த யுவ­தியை கழற்றி விட, அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஊடாக மரண அச்­சு­றுத்தல் விடுத்த காத­ல­னையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒரு­வ­ரையும் பிலி­யந்­தலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். காதலி செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சூட்­சு­ம­மான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்த பிலி­யந்­தலை பொலிஸார் இவர்­களை நேற்று கைது செய்­துள்­ளனர்.

தனது காத­லனின் முன்னாள் காதலி என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் ஒரு யுவதி, எஸ்.எம்.எஸ். ஊடாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்­ப­தாக யுவதி ஒருவர் பிலி­யந்­தலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­துள்ளார். தான் தனது காத­லனை அதிகம் நேசிப்­ப­தா­கவும், இந் நிலையில் காத­லனை கழற்­றி­வி­டாமல் தொடர்ந்து காத­லித்தால் தன்னை தீர்த்­துக்­கட்­டு­வ­தாக பழைய காத­லி­யாக தன்னை அடை­யாளம் காட்­டிக்­கொள்ளும் யுவதி மிரட்­டு­வ­தா­கவும், காத­லனை கைவிட்டால் 50 இலட்சம் ரூபா பணம் தரு­வ­தாக கூறி­ய­தா­கவும் முறைப்­பாட்­டா­ள­ரான யுவதி பொலி­ஸா­ரிடம் குறிப்­பிட்­டுள்ளார்.

இந் நிலையில் இது குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பிலி­யந்­தலை பொலிஸார் குறுஞ்­செய்தி வந்த தொலை­பேசி இலக்­கத்தை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன் போது குறுஞ்­செய்தி அனுப்­பிய தொலை­பேசி இலக்­கமும் அதனை பெற்­றுக்­கொண்ட தொலை­பேசி இலக்­கமும் ஒரே அடை­யாள அட்­டையில் பெறப்­பட்­டுள்­ளதை பொலிஸார் அவ­தா­னித்­தனர். இதன்­போது அவ்­வ­டை­யாள அட்டை யாரு­டை­யது என தேடிய பொலிஸார் அது முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தி­யு­டை­யது என தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து முறைப்­பாட்­டா­ள­ரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அதன் பின்னர் அவர் காத­ல­னி­டமும் வாக்கு மூலம் பதிவு செய்­தனர். காத­லனின் வாக்கு மூலத்தில் வெளி­யான தக­வல்­க­ளுக்கு அமைய அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண்­ணொ­ரு­வ­ரி­டமும் பொலிஸார் விசா­ரித்­தனர்.

இதன்­போதே காத­லியை கழற்­றி­விட காத­லனால் நடத்­தப்­பட்ட நாட­கமே இந்த மரண அச்­சு­றுத்தல் என்­பதும் அச்­சு­றுத்தல் விடுத்­தவர் பழைய காத­லி­யல்ல எனவும் அவர் அழ­குக்­கலை நிலைய ஊழியர் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த அழ­குக்­கலை நிலைய ஊழி­ய­ரான யுவ­திக்கு 5000 ரூபா கொடுத்து இந்த அச்­சு­றுத்­தலை செய்­யு­மாறு முறைப்­பாட்­டா­ள­ரான யுவ­தியின் காத­லனே அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் இது தொடர்பில் தனது காத­லியின் பெய­ரி­லேயே எடுக்­கப்­பட்ட சிம் அட்­டை­யொன்­றி­னையும் அவர் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந் நிலையிலேயே முறைப்பாட்டாளரின் காதலனையும் அவருக்கு உதவிய அழகுக் கலை நிலைய யுவதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதலன் கல்கிசை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts