காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினுடைய யாழ். மாவட்ட அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இந்த அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகள் 20 பேருக்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதேவேளை, யாழ். மாவட்ட காணி அதிகாரி ஆறுமுகம் சிவசுவாமியிடம் அலுவலகத்திற்கான உத்தியோக பூர்வ கடிதத்தினையும் கையளித்தார்.
இந்த நிகழ்வில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக் பீரிஸ், வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.