காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் :-மாவை

mavai mp inவடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை.

இதை நாங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார். தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் தமிழ் மக்கள், ஒரு போதும் அரசின் நட்ட ஈட்டை வாங்கமாட்டார்கள்’. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

வடக்கில் ஓர் அங்குலக் காணியைக் கூட அரசு பலாத்காரமாக எடுக்கவில்லை யென்றும், நட்ட ஈடு வழங்காமல் காணிகள் எதனையும் அரசு எடுத்திருக்குமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுமுன் தினம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த அமைச்சர் தனது வாதங்கள்தான் வரி என்றால் உயர் நீதிமன்றத்தில் நாம் காணி அபகரிப்புக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்த பின்னர் அங்கு வந்து தனது வாதங்களை முன்வைக்கட்டும்” என்றும் மாவை சேனாதிராசா கூறினார்.

Related Posts