காணி சுவீகரிப்பிற்கு எதிராக தெல்லிப்பளையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இலங்கை அரசாங்கத்தின் முறையற்ற காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கி விட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.இன்று (19) தெல்லிப்பளையிலும், தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.இந்த போராட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய தமிழ் தரப்புகளிடையே இருந்த ஒற்றுமை பலரையும் நம்பிக்கை கொள்ள வைத்திருந்ததாக தெரியவருகிறது.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரிவினையின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts