காணி சுவீகரிப்பிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீடு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!!

முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இராணுவ முகாம் வாசலில் வைத்து நில அளவீட்டு பணிக்காக சென்ற அதிகாரிகளை திருப்பியனுப்பியுள்ளனர்.

இந்த காணி உரிமையாளர்களான தமக்கு அறிவிக்காமல் இரகசியமான முறையில் அளவீடு செய்து இராணுவத்துக்கு வழங்கும் சதி திட்டமாக இதை பார்ப்பதாகவும் தமது காணிகளை தம்மிடம் ஒப்படைமக்குமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Posts