வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்த 28 வருடத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாமில் வாழ்ந்து வந்த மக்களுக்கு முதற்கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து தற்போது குடும்பப் பெருக்கத்தினால் பலர் காணியின்றி முகாம்களிலே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய மக்களுக்கே கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மக்களைக் குடியேற்றுவதற்காக 40 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முதற்கட்டமாக மாவிட்டபுரம் – கீரிமலைப் பகுதியில் சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியில் குடும்பத்துக்கு தலா 2 பரப்புப்படி 129 குடும்பங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படடுள்ளது.
இப்பணியானது தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவமோகன் தலைமையில் நில அளவைத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.