காணி இல்லாதோருக்கு காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மீள்குடியேற்றப்பட்டு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

event-26082016-2

event-26082016-1

யாழ்ப்பாணம் பலாலியில் நேற்று மதியம் குறித்த காணி உரிததுக்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, அரசாங்கத்தினால் அண்மையில் காணிகள் வழங்கப்பட்டு அவர்கள் மீளக்குடியேற்றப்பட்டனர்.

அத்துடன் மீள்குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய, நேற்று 130 குடும்பங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மாத்தில் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மற்றும் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மகேஷ் சேனநாயக்கா, வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிறீமோகனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts