காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்

பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது.

தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது.

இந்தக் காணியினை இராணுவத்துக்கு வழங்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 7ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் கடிதம் அனுப்பப்பட்டு இன்றைய தினம் காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த சுவீப்கரிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததின் பிரகாரம், காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

நிரந்தரமாக இந்தப் படைமுகாம் மூடப்பட்டு, காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts