காணி அபகரிப்புக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட முடியும்

human-kanakarajகாணிஉரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் நிலையில், காணி உரிமை காணியாளர்கள் இனங்காணப்படவில்லை என்று தெரிவித்து காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்.

வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை மற்றும் நகுலேஸ்வரம் பகுதியில் 186 ஏக்கர் காணிகள் சுவீகரிப்புச் செய்வதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டன. கடற்படை முகாம் அமைப்பதற்காகவே மேற்படி காணிகள் சுவீகரிப்புச் செய்யப்படவுள்ளன அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் இனங்காணப்படவில்லை என்றும் சுவீகரிப்பு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த காணி உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நிலையில், இவ்வாறு காணி உரிமையாளர்கள் இனங்காணப்படவில்லை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாமா என்று கேட்ட போதே இணைப்பாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“”பாதிக்கப்பட்ட மக்கள் எமது ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும். காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் எமக்குச் செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கான தீர்வுகளும் ஆணைக்குழுவினால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. காணி உரிமையாளர்கள் இனங்காணப்படவில்லை என்று தெரிவித்து சுவீகரிப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமைக்கு எதிராக குறித்த காணிகளின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்ய முடியும் என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

Related Posts