காணியிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிக்கின்றனர்!

தமது காணிகளிலுள்ள அடையாளங்களை இராணுவத்தினர் அழிப்பதாக, பிலவுக்குடியிருப்பு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமது அடையாளங்களை இராணுவத்தினரல் அழிப்பதாக குற்றம சுமத்தியுள்ள இம்மக்கள் அது குறித்து தெரிவிக்கையில், ‘எமது காணிகளிலுள்ள பயன்தருமரங்களை இராணுவத்தினர் அழித்து வருகின்றனர், நாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர், அங்கு வருபவர்களிடம், எமது காணிகளில் நாம் வாழ்ந்ததுக்கான ஆதாரங்களாக, வீடுகளின் அத்திவாரங்கள், மலசலகூடங்கள், கிணறுகள், நீண்டகால பயிர்கள் எனபவற்றை அடையாளம் காட்டி வருகின்றோம்.

இந்நிலையில், எமது அடையாள சின்னங்கள் பலவற்றை அழித்த இராணுவத்தினர், தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னரும், எங்களுடைய அடையாளங்களை அளிக்கின்றனர்” என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Posts