காணியற்ற குடும்பங்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், தாம் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச காணிகளை அடையாளம் காட்டுமிடத்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பரிசீலனை செய்யப்படும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts