காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களினால் தங்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Related Posts