காணிகளுக்கு நட்டஈடுகள் வழங்கும் அறிவித்தல் வந்தது?

ARMY-SriLankaவலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே நட்டஈடு வழங்குவதற்கான அறிவித்தல் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. .

வலி. வடக்கில் படையினரின் சட்டவிரோத காணி அபகரிப்புக்கு எதிராக மக்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் இடைக்காலத் தடையைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும், குறித்த காணி சுவீகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறும் காணி உரிமையாளர்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளித்து காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது.

இந்த நிலையில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால், மக்களின் ஆட்சேபனைகளுக்கு இடமளிக்கப்படாமலே நட்டஈடு வழங்குவதற்கான அறிவித்தல் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அனுப் பப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Related Posts