காணாமல் போன வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்பு

cobra-whiteகாணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது.தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் வாயிற் கதவிற்கு அருகமையில் இந்த பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

வெள்ளை நாகம் காணாமல் போன சம்பவம் மிருகக் காட்சிச் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மிருகக் காட்சிச் சாலையின் ஊர்வனப் பிரிவில் கடமையாற்றி வரும் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை மிருகக் காட்சிச் சாலையின் வாயிற் கதவு அருகாமையில் ஒர் பொதியில் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

வெள்ளை நாகம் மாயம்

Related Posts