Ad Widget

காணாமல் போன மகள், அருட்சகோதரிகளின் கட்டுப்பாட்டில் -கண்ணீருடன் தாய்

கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் காணாமல்போனோா் தொடா்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமா்வில் தொிவித்துள்ளாா்.

mother

இதனையடுத்து ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்திற்கு முறைப்பாடு செய்த தாயாருடன் சென்றனா்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

இடம்பெற்ற இரண்டாம் (26) நாள் அமா்வின் போதே குறித்த தாய் காணாமல்போன தனது மகள் உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் இருப்பதாகவும் எனினும் மகள் அங்கு இல்லை என அருட்சகோதரிகள் தெரிவிப்பதாகவும் ஆணைக்குழு அதிகாரிகளிடம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

குற்றச்சாட்டை கவனத்திற்கொண்ட ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த தாயாருடன் 11.30 அளவில் கன்னியர் மடத்திற்குச் சென்றனர்.

எனினும் தனது மகள் என அந்த தாயாரால் அடையாளம் காணப்பட்ட பிள்ளையை அருகில் சென்று பார்வையிடுவதற்கு அருட்சகோதரிகள் அனுமதிக்கவில்லை என குறித்த தாய் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த பிள்ளையைப் பார்வையிடுவதாயின் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பார்வையிடவேண்டும் என அருட்சகோதரிகள் தெரிவித்ததாக தாயார் தொிவித்துள்ளாா்.

எனவே இதற்கான மேலதிக நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவா் தொிவித்துள்ளாா்

Related Posts