காணாமல் போன சிறுவன் யாழ். கந்தரோடை குளத்தில் சடலமாக மீட்பு

body_foundயாழ். கந்தரோரடை இக்கிராயன் குளத்தில் விளையாடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் குளத்திலிருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கந்தரோடை சுன்னாகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் றூக்சானன் வயது 14 என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்த இச்சிறுவன் நேற்று காலை குளத்தில் சடலமாக மிதந்துள்ளார். இவரைக் காணவில்லையென்று பெற்றோர் சுன்னாகம் பொலிஸில் நேற்று முறைப்பாடென்றை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மல்லாகம் நீதிவான் சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Related Posts