காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

MISSING-GIRL

தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற 17 வயதுடைய எஸ்.சுமங்கலா என்ற சிறுமியே இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன தமது மகளை மீட்டுத்தருமாறு கோரி சிறுமியின் பெற்றோர், பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

4 அடி 3 அங்குல உயரமும் மெல்லிய உடல் தோற்றமும் கொண்ட இவர் கடைசியாக செல்லும் போது, நீல நிற சுடிதார் அணிந்திருந்தார்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பளை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் 024 324 8093 மற்றும் பளை பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கம் 0718591350 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related Posts